பேசிக்கிட்டாங்க...


கோபி

பஸ் நிலையத்தில் இளம் தம்பதி...
``என்னடி... அரைமணி நேரமா 
நிற்கறோம்... உங்க ஊருக்குப் போற பஸ்ஸைக் காணாம்...''
``ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ்தான் வரும்... அதுக்குத்தான் பைக்கில் வந்துடலாம்னு சொன்னேன்... நூறு கிலோமீட்டர் பைக்கிலயே வந்தா டயர்டா ஆகிடுவேன்னு சொன்னீங்க...''
``நான் டயர்டா ஆகக் கூடாதுனா உங்க அப்பாவை கார் வாங்கித் தரச்சொல்ல வேண்டியதுதானே..?’’
``சின்னதா ஒரு கேப் கிடைச்சாலும் எங்க அப்பாவுக்கு ஆப்பு வச்சுடுவீங்களே... அதோ... பஸ் வந்துடுச்சு. போலாம் வாங்க...''
- கோபி, அவ்வை.கே.சஞ்சீவிபாரதி

கும்பகோணம்

பஸ்ஸில் கூட்ட நெரிசலில் இருவர்...
``சார் என் காலை மிதிக்கிறீங்க பாருங்க... காலை எடுங்க சார்.''
``நான் மிதிக்கல சார்... இடுப்புக்கு கீழ பாருங்க... குளத்துல தாமரை வேர் மாதிரி காலெல்லாம் பின்னிக் கிடக்குது. யார் காலு எங்க இருக்குன்னே கண்டு பிடிக்க முடியுதா பாருங்க.''
``சார்... கடவுள் ரொம்ப கருணை உள்ளவர் சார்...''
``என்ன திடீர்னு பக்திமானா மாறிட்டீங்க...''
``ஆமா... மிருகங்களாட்டாம் நம்மளயும் நாலு காலோட கடவுள் படைச்சிருந்தா இப்ப நம்ம நெலமை என்னவாகியிருக்கும் பாருங்க.''
- கும்பகோணம், குடந்தை பரிபூரணன்

x