‘மீம்ஸ்’ பசிக்கு மீல்ஸ் போட்ட மகராசா!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

அன்றைக்கான பணியைத் தொடங்க ஆயத்தமான பாச்சாவை அச்சுறுத்தும் வகையில் ஆசிரியரிடமிருந்து வந்து விழுந்தது பட்டியல். “என்னடா, இன்னைக்கு வந்திருக்கிற லிஸ்ட்டைப் பார்த்தா லிவரே நடுங்குது…” என்று பதறிய பாச்சாவைப் பார்த்து பகடிச் சிரிப்பு சிரித்த பைக், “ம்க்கும்... 3,000 டன் தங்கம் வதந்தி மாதிரி வாய் பிளக்க வெச்சு, கடைசியில 160 கிலோதான் கிடைக்கும்னு வாயடைக்க வச்ச மாதிரி, உன் பேட்டியெல்லாம் புயலா ஆரம்பிச்சு, புஸ்வாணமாதானே முடியும். ஷாக்கைக் குறை” என்றபடி பறந்தது.
முதலில் கருணாஸின் இல்லம்.

ரஜினி நடித்த படங்களின் மேக்கிங் வீடியோக்களை யூ-டியூபில் பரபரப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார் கருணாஸ்.
“அவனவன் ரஜினி நடிச்சிருந்தா அது தர்பார் தரத்துக்கு இருந்தாலும் பரவால்லன்னும் பழைய படங்களா தேடிப் பிடிச்சுப் பார்த்துட்டு இருக்கான். நீங்க என்னடான்னா அவர் நடிச்ச மேக்கிங் வீடியோக்களை ஆராய்ஞ்சிட்டு இருக்கீங்களே. அதேமாதிரி நீங்களும் நடிக்கப்போறீங்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தான் பாச்சா.

“ரஜினி பற்றி நிறைய ரகசியம் வச்சிருக்கேன். யார்கிட்டயாவது சொல்லணும்னு துடிச்சிக்கிட்டு இருந்தேன். யாருமே கேட்க மாட்டுறாங்க… பாச்சா நீ கேளேன்…” என்றார் கண்களை அகல விரித்து.

x