நானும் எலெக்ட்ரீசியனாக்கும்!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அம்மிணியின் குரல் உச்சபட்ச டெசிபலில் கேட்டுச்சுன்னா நம்ம மேல ஏதோ குற்றப் பத்திரிகை வருதுன்னு அர்த்தம். கொஞ்ச நஞ்சமா எத்தன வருச அனுபவம்!

அன்னிக்கும் அப்படித்தான் குரல் ஒசந்துச்சு. நம்மளே போயி தலையக் குடுக்குறதா... இல்லாட்டி எதுவுமே தெரியாத மாதிரி ஜகா வாங்குறதான்னு மனசுக்குள்ள திட்டம் தீட்டிக்கிட்டு இருக்கையிலயே, ‘டொக்கு’ன்னு காபி டம்ளரக் கொண்டாந்து வச்சாங்க.
“என்னம்மா பிரச்சினை.. வேலக்காரம்மா வரலியா?”ன்னு எதுவுமே தெரியாத மாதிரி கேட்டேன். “உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது”ன்னு முறைச்சாங்க. எதச் சொல்றாங்கன்னு எனக்கொண்ணும் புரியல; மையமா முழிச்சேன்.

“இங்க வாங்க”ன்னு தரதரன்னு இழுக்காத குறையா கூட்டிட்டுப் போனாங்க. “ஸ்விட்சைப் போடுங்க”ன்னு சொன்னதும் அவங்க காட்டுன ஸ்விட்சைத் தட்டிட்டு, “போட்டாச்சு... இப்ப என்ன”ன்னு கேட்டேன். வலிக்காம தலையில அடிச்சுக்கிட்டவங்க, “ஸ்விட்சைப் போட்டீங்களே... லைட்டு எரியுதா?”ன்னு கேட்டாங்க.

x