ஈரோடு
பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்...
``மச்சி... இனிமேல் சரக்கு அடிச்சிட்டு பஸ்ல போகக் கூடாதுடே..!''
``என்னடா சொல்ற... தலை தொங்குற அளவுக்கு சரக்
கடிச்சாலும் பஸ்லதான் போவ... இப்ப வேண்டாம்னு சொல்ற..!''
``இப்பதான் பஸ்ல கேமரா வைக்குறாங்களாமே... நாம குடிச்சிப்புட்டு பஸ்ல விழுந்து கிடந்தா அப்புறம் போலீஸ் கேஸ் ஆகிடுமே...''
``ஓ... அதுக்குத்தான் பயப்படுறியா... நம்ம ரோடு இருக்குற நிலையில ஒரு பள்ளத்துல பஸ் ஏறி இறங்கினாலே கேமராவோட லைன் எல்லாம் கட் ஆகிடும்... அப்புறம் எங்கிட்டு நம்மளை போலீஸ் பிடிக்கறது..!''
- அரூர், வெ.சென்னப்பன்
கோவை
சூலூர் பத்திரப்பதிவு அலுவலக வாசலில்...
``பத்திரப்பதிவு முடிஞ்சதுல்ல... சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போக வேண்டியதுதானே!''
``சார்! இந்த லேடீஸ் இருக்காங்களே... காலையில் வேலைக்குப் போயிட்டு, சாயந்தரம் வீடு திரும்பும் ஆபீஸர் வேலையைத்தான் மதிப்பாங்க. நம்மை மாதிரி புரோக்கர் ஆளுங்க நடுவுல வீட்டுக்குப் போனா, ‘அதைச் செய், இதைச் செய்'னு வேலைக்காரன் மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. அதனால, மதிய சோத்தை எங்காவது வச்சு சாப்பிட்டுட்டு சாயந்தரமா போனாதான் மரியாதை!''
``அப்டின்னா... இன்னும் ‘மன்னார் அண்ட் கோ கம்பெனி' ஓடிக்கிட்டுதான் இருக்குன்னு சொல்லுங்க!''
- நெய்வேலி, கி.ரவிக்குமார்