கன்னியாகுமரி
கடற்கரையில் இரு நண்பர்கள்...
``மாப்ள... பணம் இருந்தால் ஒரு மூவாயிரம் கொடேன்...''
``எதுக்கு?''
``லவ்வர்ஸ் டேல... லவ்வருக்கு சுடி எடுக்கணும்...''
``ஓ சரி சரி...''
``நீ உன் லவ்வருக்கு ஒண்ணும் வாங்கலையா?''
``இல்லடா''
``என்ன இது கஞ்சத்தனமான காதலா இருக்கு...''
``கஞ்சத்தனமா இருக்கலாம்டா... உன்னை போல லவ்வருக்காக பிச்சை எடுத்தாதான் கோளாறு...''
- பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி
தஞ்சாவூர்
கீழவாசலில் இருவர்...
``மாப்ளே... பேங்க், கீங்க் ல பணம் போட்டு வெச்சிருந்தீன்னா எடுத்துடு! ரெண்டாயிரம் ரூபாயை செல்லாதுன்னு சொன்ன மாதிரி , ஒரே நாள்லே பேங்க்ல இருக்கிற எல்லா பணத்தையும் மோடி கவர்மென்ட் எடுத்திடுவாங்களாம்!''
``ஆமா, இங்க லட்சம் லட்சமா சம்பளம் வருது பேங்க்ல போட்டு வைக்கிறாங்க! கையிலே வாங்கிறது வாய்க்கும் வயித்துக்குமே சரியா இருக்கு! எல்லாப் பணத்தையும் எடுத்துக்கிட்டு, மூணுவேளை சாப்பாட்டை மட்டும் போடச்சொல்லு போதும்!''
``சத்தமா பேசாதடா சாம்பிராணி! இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டா இதைக்கூட செஞ்சிட்டு, ‘ஒரே நாடு ஒரே மீல்ஸ்' னு பேரு வெச்சிடுவாங்க... ஜாக்கிரதை!''
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்