பொட்டி ரகசியம்


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

வேடிக்கையா இருக்கும் சொன்னா... இந்தக் காலத்துலயுமான்னு. ஆனா நான் சொல்றது நெஜம்... நம்புங்க. எனக்குன்னு ஒரு பொட்டி இருக்கு. அதை யாரையும் தொடவிட மாட்டேன்... மகனார்கூட ரொம்ப நாளா சந்தேகமா கேட்டுகிட்டிருந்தார். “அதுல அப்படி என்னப்பா வச்சிருக்க?” அம்மிணிக்கு எப்பவுமே நையாண்டி நல்லா வரும். அதுவும் என்னைப் பத்தின்னா? “அவரு எழுதித் திரும்பி வந்த கதைகளா இருக்கும்டா.”

ரெண்டு பேரும் ஹா...ஹான்னு சிரிச்சு ஓஞ்சாங்க.

அப்புறம் மகனார் சொன்னாரு. “சேச்சே...அப்படில்லாம் சொல்லாதே. நாம கொண்டாடாட்டியும் எத்தனை பேர் போன் செய்யறாங்க!”
அம்மிணி கண்ணடிச்சாங்க. “அந்த போன்லாம் எதுல வருது பார்த்தியா? நம்ம வீட்டு லேண்ட்லைன்ல... ஏன்னா அதுல காலர் ஐடி இல்லை. யார் கூப்பிட்டாங்கன்னு தெரியாது. ஒரே ஆளு நாலு நாளைக்கு ஒருக்கா கூப்பிட்டுப் பேசினா நமக்குத் தெரியவா போவுது?”
மறுபடியும் ஹா.. ஹா.. ஹா.

x