பேசிக்கிட்டாங்க...


சீர்காழி

ஒரு டீ ஸ்டாலில்...

“அண்ணே! இப்போ டீ, பிஸ்கட் சாப்பிட்ட கணக்கை நோட்டுல எழுதி வெச்சிருக்கேன்... சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க.”
“நீ டிஎன்பிசி குரூப் ஃபோர் தேர்வு எழுதின ஆள் இல்லையே?”
“என்னங்க சம்பந்தமே இல்லாம ஏதோ கேட்கிறீங்க?”

“எல்லாம் ஒரு முன்ஜாக்கிரதைதான். அழியிற மையால எக்ஸாம் எழுதின மாதிரி...நீ எழுதின கணக்கும் மாயமா மறைஞ்சிட்டா கடை போண்டியாகி நான் தலையில துண்டைப் போட்டுக்கிட்டுப் போக வேண்டியதுதான் தம்பி. அதான் கேட்டேன்.”
“நீங்க வேற காலேஜ்ல வச்ச அரியர்ஸே இன்னும் முடியலை. இதுல இது வேறயாக்கும்!”
- சீர்காழி, வி.வெங்கட்

x