பேசிக்கிட்டாங்க...


தஞ்சாவூர்

டீக்கடையில்...
``மாஸ்டர்... குமாரு வந்தானா?''
``குமாருன்னா... கொக்கி குமாரா? ஆயிரத்தெட்டு குமாரு வந்துட்டுப்போறான்! நீ எந்த குமாரை கேட்கிறே?''
``முகத்திலே தழும்பு இருக்குமே...''
``ஓகோ... உனக்கு டீ வாங்கி கொடுத்துட்டு மொத்தமா கடன் சொல்லிட்டுப் போவானே அவனா... டீ வேணும்னா சாப்பிட்டுட்டு காசை அப்புறமா கொடு... அவனை ஏன் தேடறே? கடனையே கன்ஃபீஸா கேட்கிறது!''
``நீங்க மட்டும் என்ன மாஸ்டர்... ஆளே வராத கடைக்கு, என்னமோ ஆயிரம் பேர் வந்துட்டுப்போற மாதிரி சீன் காட்டறீங்களே!''
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

தஞ்சாவூர்

 கரந்தை தமிழ்க் கல்லூரி அருகில் இருவர்...
``அப்பருக்கே சிட்டிசன்ஷிப் சிக்கல் இருந்திருக்கும் போல…”
“எப்படி..?”
“நாமார்க்கும் குடியல்லோம்ங்கிறாரே…”
“முடியலைடா சாமி…”
“ஆமா இன்னும் முடியலை… கணியன் பூங்குன்றனாரும் என்ஆர்சியை ஆதரிச்சிருக்காரு…”
”உளறாதே… யாதும் ஊரே யாவரும் கேளிர்னு ஒவ்வொருத்தனுக்கும் அவர் உலகக் குடியுரிமை தந்துருக்காரே…”
“நீ சரியா புரிஞ்சுக்கலை… அத அசை பிரிச்சுப் பாரு… ‘யாது உம் ஊரே? யாவர் உம் கேளிர்?’னுதான் கேட்கிறாரு..!”
“பாவம்டா அவங்க... விட்டுருடா ப்ளீஸ்...”
- தஞ்சாவூர், தாமு

x