என் திட்டமெல்லாம் எடப்பாடி அண்ணனுக்கே தெரியாது!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

சென்னைப் புத்தகத் திருவிழா தொடங்கினாலும் தொடங்கியது. வருடா வருடம் புனிதப் பயணம் போகும் பக்தர்களைப் போல் பதிப்பகத்தார் முதல் படிப்பகத்தார் வரை பலரும் அங்கு குவிந்துகொண்டிருந்தார்கள். பாச்சாவும் பல புத்தகங்களை எழுதியிருப்பவன்… மன்னிக்கவும், பார்த்திருப்பவன் எனும் முறையில் அந்தப் பக்கமாகச் சென்றிருந்தான். வாசகர்களைவிட எழுத்தாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், வந்திருக்கும் வாசகர்களும் ஒன்றிரண்டு புத்தகங்களை எழுதியவர்கள், எழுதும் முடிவில் இருப்பவர்கள் என்றும் தகவல் தெரிந்திருந்தும் தைரியமாக அங்கு தடம் பதித்தான்.

அரசியல் தலைகள் தென்பட்டால், அங்கேயே திடுக் பேட்டிகளை எடுத்துவிடலாம் என்று தீர்மானம்.
அங்கே முதலாவதாகத் தென்பட்டவர், எந்தவிதமான கேரக்டர் கொடுக்கப்பட்டாலும், அதை மெருகேற்றி அந்தக் கேரக்டராகவே மாறிவிடும் நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன்.

“உலக நாயகனே…. நீங்களே எக்காலத்துக்குமான என்சைக்கிளோபீடியா. உங்களுக்குமா புத்தகங்கள் தேவைப்படுது?” என்று ‘ஆரம்பித்தான்’ பாச்சா.

x