பேசிக்கிட்டாங்க...


குரும்பூர்

டீக்கடையில் இருவர்...
“ஏம்பா! கவனமா பார்த்து வாய்க் கொப்பளிக்கக்கூடாது... இங்கே பாரு! மேலெல்லாம் துப்பி வைச்சிருக்கே!’’
“நீரு கவனமா வர்றதை விட்டுட்டு என்னை குத்தம் சொல்றீரு?’’
“ஆளை விடுப்பா சாமி! இப்படி வம்பு சண்டைக்குப் போகுறதுக்குன்னே ஊர் ஊருக்கு ட்ரம்ப் மாதிரி ஆளுங்க இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாம போச்சுப்பா!’’
சூழவாய்க்கால், எ.முகமது

அரூர்

முருகன் கோயில் தெருவில்...
"என்னடே... பொங்கலுக்கு புது டிரெஸ் எடுத்தாச்சா..?"
"நான் போன மாசம் பழனிக்குப் போகும்போது அங்கேயே ஆறு வருஷ பொங்கலுக்கும் சேர்த்து டிரெஸ் எடுத்துட்டு வந்துட்டேன்.."
"என்னடே சொல்ற... எச்சை கையில கூட காக்கா விரட்ட மாட்டியே... ஆச்சரியத்துல எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடும் போலயே."
"ஆமாடே... நூறு ரூபாய் டி சர்ட் ஆறு எடுத்துட்டு வந்துட்டேன். வேஷ்டியை வருஷா வருஷம் ரேஷன் கடையிலேயே கொடுத்திடுவாங்க... அதனால பொங்கலுக்கு நோ கவலை.."
"உன்னை மாதிரியே இந்தியாவுல எல்லாரும் இருந்துட்டா பொருளாதார மந்தநிலையே வந்திருக்காது..."
- அரூர், வெ.சென்னப்பன்.

x