நேர்மைக்குக் கிடைத்த வெற்றிகரமான தோல்வி!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பைக் மீது பவனி வந்த பாச்சா, தனது தலைக்கு மேலே, ‘ரட்ட… ரட்ட… ரட்ட’ எனத் தாறுமாறாக ரவுண்டடித்த ஹெலிகாப்டரைப் பார்த்ததும் பதறினான். “ஈரான் - அமெரிக்கா சண்டை இந்தியா வரைக்கும் வந்துடுச்சு போல… இங்கேயும் குண்டுபோட ஹெலிகாப்டரை ட்ரம்ப் அனுப்பியிருக்கார்…” என்றதும், பைக் வாய்விட்டுச் சிரித்தது. “சரியாப் போச்சு போ… இது தர்பார் தலைவர் கட்-அவுட்டுக்கு மலர் தூவுற ஹெலிகாப்டர்யா. ஒத்திகை பார்த்துட்டு இருக்கு” என்று பைக் சொன்னதும் பதற்றம் தணிந்த பாச்சா, “நாட்டு மக்கள் மனசெல்லாம் மத்தாப்பா பூத்துக் கிடக்கு. அதுல கொஞ்சம் பூவை எடுத்து கட்-அவுட்டுக்கு அபிஷேகம் பண்ணலாமே” என்று சொல்ல பைக், குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.

முதலில் சந்திக்க வேண்டியவர் முதல்வர் பழனிசாமி.

“ஆகட்டும் ஜி. அப்படியே செஞ்சுடறேன் ஜி. அதையே சொல்லிடறேன் ஜி” என்று அட்டென்ஷனில் நின்றபடியே அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

x