திட்டுவிளை
ஒரு சலூனில்...
``என்னப்பா இது... மூணு வயசுப் பையனுக்கு முடி வெட்டினதுக்கு 120 ரூபாயா ? எனக்கே 100 ரூபாய்தானே வாங்குவ?’’
``அண்ணே... அரை மணி நேரத்துல முடியுற வேலைக்கு ஒரு மணி நேரம் ஆயிருக்கு. அவன் அழாம இருக்க குரங்கு, நாய் மாதிரியெல்லாம் நடிச்சுக் காட்டியிருக்கேன். இதுல புள்ளிங்கோ ஸ்டைல் கட்டிங் வேற. இதுக்கு நீங்க என்னைய பாராட்டி 200 ரூபா தர்றதை விட்டுட்டு பேரம் பேசிட்டிருக்கீங்களே!’’
``முடிவெட்ட விட உன் வாய்வெட்டு ரெம்ப நல்லாயிருக்குப்பா. இந்தா 120 ரூபா!’’
- நாகர்கோவில், எஸ்.ரஸிதா
சென்னை
வேளச்சேரியில் மால் முன்பு இருவர்...
``வர வர டெக்னாலஜி வளர்ச்சியால தொல்லை அதிகமாகுதுடா...''
``ஏன்டா உன்னோட அக்கவுன்ட யாராச்சும் ஹேக் பண்ணிட்டாங்களா?’’
``இல்லை... ஏடிஎம்ல பணம் எடுக்கணும்னா ஓடிபி வேணுமாமே...’’
``ஆமா, ஏற்கெனவே எல்லா டீடெயிலும் கொடுத்துட்டு கடைசியில பணம் இல்லைன்னு வரும் ... இப்போ ஓடிபி மெஸேஜ் வந்து, அதை சரியா என்டர் பண்ணி... கஷ்டம் தான்.’’
``ம். இனிமே பணம் வரலன்னு பொலம்புறத விட்டு ஓடிபி வரலைன்னு பொலம்புறது அதிகமாயிடும்.’’
- தஞ்சை, சுபா