பேசிக்கிட்டாங்க... 


தஞ்சாவூர்

பழைய பேருந்து நிலையம் அருகே...
``என்னப்பா... யாருக்கு ஓட்டுப் போட்டே ?''
``நல்லா கேட்டே போ! நாலு சீட்டு குடுத்தானுவோ... கண்ணாடி எடுத்துப்போக மறந்துட்டேன்! சின்னமும் புரியலே... ஒரு எழவும் புரியலே...  ஏதோ குத்திட்டு வந்தேன்!''
``அடப்பாவி!  விலைமதிப்பில்லாத வாக்குரிமையை வீணாக்கிட்டியே!''
``நல்லா வாயிலே வந்திரும்...  ஒரு பைசா தரலேங்கிறேன்... விலைமதிப்பற்ற வாக்குரிமையாம்ல...போடா டேய்!''
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

வேலூர்        

அல்லாபுரத் தெருவில் இளைஞர்கள் இருவர்...
``வா மச்சி! குடியுரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு எங்க வீட்ல நாளைக்கு கோலம் போடறோம்... நீயும் உங்கம்மாகிட்டே சொல்லி போடச் சொல்றா...''
``அடேய்... அங்கே தெருமுனை குப்பைத்தொட்டி பக்கத்துல உங்கப்பா போதையில அலங்கோலமா கெடக்கறாரு... நீ கோலத்தைப் பத்தி பேசிட்டிருக்கே!’’
``குடி உரிமையை எங்கப்பா தப்பா புரிஞ்சுக்கிட்டா ருடா... அவர் அங்கேயே கெடக்கட்டும்!’’
``முதல்ல, உங்கப்பாவுக்கு வீட்டுக்குள்ள குடியுரிமை கொடுங்கடா... அவரு திருந்துனதுக்கு அப்புறமா நம்ம போராட்டத்த பாத்துக்கலாம்!’’
- வேலூர், வெ.ராம்குமார்

x