யாரும் தொட முடியாதவன்!


ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

சில துறைகளில் யாரும் தொட முடியாத உச்சத்தை சிலர் நிறுவியிருப்பார்கள். அப்படி ஓவியத்தில் யாரும் தொட முடியாத உச்சத்தைத் தொட்டவர்களில் முதன்மையானவர் ரெம்ப்ராண்ட் என்றால் மிகையில்லை. இவருக்கு ஓவியக் கலை கைவந்த அளவுக்கு வேறு யாருக்கும் வந்திருக்காது, வரவும் வராது என்று சொல்லும் அளவுக்கு இவருடைய படைப்புகள் உலகப் புகழ்பெற்றவை.

17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரெம்பிராண்ட் வான் ரீஜின் டச்சுக்காரர். இவர் தனது 63 ஆண்டுகால வாழ்க்கையில் முந்நூற்றுக்கும் மேலான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.  இவருடைய ஓவியங்கள் கருத்தளவிலும் சரி, அவற்றின் பிரம்மாண்டத்திலும் சரி முதன்மையாக விளங்குபவை. இதனால்தான் இவருடைய ஓவியங்கள் இவருக்குப் பின்னால் வந்த அத்தனை ஓவியர்களுக்கும் பாடமாகவும், சவாலாகவும் அமைந்தன.  

இவர் பாரோக் ஸ்டைலில் தனது ஓவியங்களை வரைந்திருக்கிறார். அதாவது அதிகபட்ச அழகு வெளிப்பாடுகளும், பகுதியளவு பொலிவிழந்தவையாகவும் இருக்கும் ஓவியங்கள். இவர் வரைந்த ஓவியங்கள் எண்ணிக்கை மட்டுமல்ல அவற்றில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லக்கூடியவற்றின் எண்ணிக்கையும் அதிகம்தான். பெரும்பாலும் பிழைப்புக்காக தளபதிகள், தொழிலதிபர்கள், அரசு நிர்வாகிகள் ஆகியோரின் உருவப்படங்களை வரைந்துகொண்டிருந்த ரெம்ப்ராண்ட் தன்னுடைய உள்ளுணர்வுக்காக, கலையின் மீதான தாகத்துக்காகவும் பல ஓவியங்களை வரைந்தார்.  

x