பேசிக்கிட்டாங்க...


தஞ்சாவூர்

பழக்கடையில்...
``சீத்தாப்பழம்  கிலோ அறுபது ரூபாய்தானா... பரவாயில்லியே!''
``அதிகமா ஓட்டம் இல்லீங்க...அதான் விலையைக் குறைச்சிட்டோம்!''
``உங்களுக்கு வியாபார உத்தி தெரியல!   ராமனோட ஒய்ஃப் சீதா விரும்பிச் சாப்பிட்ட பழம்னு ஒரு போர்டை வைங்க... பிஜேபி காரங்க, அதிமுக காரங்க  எல்லாம் வந்து அள்ளிட்டுப் போயிடுவாங்க!''
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

சீர்காழி

டீக்கடை ஒன்றில் இருவர்...
``நீ சுத்த சைவமா... வெங்காயம், பூண்டு கூட சாப்பிட மாட்டியாடா?''
``ஆமாம்டா அதீத சைவம். கடும் பத்தியம்டா...''
``குடிச்சுட்டா மட்டும் லெக்பீஸ் , கிரேவின்னு கேட்கறியே... அதுல வெங்காயம் பூண்டு காம்பினேஷன் இருக்குமேடா...''
``அரக்கன் உள்ள போய்ட்டா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்டா...''
``அம்பியா மாறிடுவியா நாயே... ஓசி குடிக்கி பழக்கத்த மாத்துற ஆளு நீ... பத்து அடி நகருடா முதல்ல...''
- சீர்காழி, பி.கே.ராதா

x