சீர்காழி
டாஸ்மாக் கடையில் கஸ்டமரும் கடைக்காரரும்...
``ரெகுலர் கஸ்டமர் எல்லாம் மலைக்கு மாலை போட்டுட்டாங்க போல... வியாபாரம் காத்து வாங்குதுல்ல சார்...''
``ஆமாம்... என்ன பத்துநாள் டல்லாயிருக்கும்... உள்ளாட்சி தேர்தல் தேதிதான் டிசம்பர் ரெண்டாம் தேதி அறிவிக்கறதா சொல்லிட்டாங்களே... அப்புறம் வியாபாரம் களைகட்டும்...''
``தலைவர் சொன்ன மாதிரி, நாளையும் அதிசயம் நடக்கும்னு சொல்ல வர்றீங்க..!''
``தேவையில்லாம இங்கே நின்னு அரசியல் பேசாதே..அப்புறம் நான் டென்ஷனாகி உன்னோட சட்டைய கிழிச்சி, உன் வீட்டை அடிச்சி நொறுக்கற மாதிரி ஆயிடும்...''
``நீ மட்டும் அரசியல் பேசாம ஆன்மிகச் சொற்பொழிவா நடத்தறே... போய்யா..!''
- சீர்காழி வி.வெங்கட்
பார்வதிபுரம்
ஒரு பரோட்டாக் கடையில் நண்பர்கள் இருவர்...
``அதுதான் பரோட்டா சாப்பிட்டுட்டோமே... அப்புறம் யாருக்குடா பார்சல் வாங்குற ?’’
``பரோட்டாவும் சிக்கன் ஃப்ரையும் சூப்பரா இருக்கு, இங்கே வச்சு பரோட்டா சூரி மாதிரி திரும்பவும் சாப்பிட்டா யாரும் கண்ணு போட்டுடக்கூடாதேன்னுதான் ரூம்ல போய் சாப்பிடுறதுக்கு வாங்குறேன்!’’
- நாகர்கோவில், எ.முகமது ஹுமாயூன்