வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
பாச்சா படு குஷியில் இருந்தான். அன்றைய பட்டியலில் உலக நாயகன் கமல்ஹாசனின் பெயரும் இருந்ததுதான் அவனது உற்சாகத்துக்குக் காரணம். அவனது துள்ளலைக் கவனித்த பைக், “ஆனாலும், இது கொஞ்சம் ஓவரா இருக்கே பாச்சா... ஏற்கெனவே கமல்ஹாசனைப் பார்த்திருக்கியே இன்னைக்கு என்ன தனி ஸ்பெஷல்?” என்றது.
“அவரை மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவராகத்தான் முன்னாடி சந்திச்சேன். இப்போ, சினிமாவுல 60 வருஷத்தைக் கடந்த கலைஞனா அவர்கிட்ட கேள்வி கேட்கலாம்னு நினைச்சேன். ‘அப்பு’ கமல் மாதிரி முட்டியை மடக்கி பேன்ட் போட்டு போட்டோ எடுத்த ஆள் நான். அதை மறக்க முடியுமா?” என்றான் பாச்சா.
“அது சரி” என்று சம்பாஷணையை முடித்துக்கொண்ட பைக், அவனை முதுகில் ஏற்றிக்கொண்டு வானேறியது.
முதலில் ராஜேந்திர பாலாஜி.