நிழற்சாலை


தொலைந்துபோனவர்கள்

ஜரிகைப் பட்டு கட்டி
ஜல்ஜல்லென வரும்
பூம்பூம் மாட்டுக்காரன்
சுடுகாட்டுக் காளியை
அர்த்த ராத்திரியில்
அழைத்துவரும்
குடுகுடுப்பைக்காரன்
கடியாரம் மூக்குத்தி
கைவளையல் மாட்டிவிடும்
சவ்வுமிட்டாய்க்காரன்
சுவடியும் கோலும்
சுருக்குப் பையுமாக
குறிசொல்ல வரும் கிழவியென
வேடிக்கை காட்டுபவர்களின்
வரத்து குறைந்துபோனதால்
வெறிச்சோடிக் கிடக்கின்றன
கிராமத்து வீதிகளும்
குழந்தைகளின் மனங்களும்.

- காசாவயல் கண்ணன்

மாலதியின் அன்றாடம்

x