தத்ரூப காட்சிகளின் கதாநாயகன்


ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

காட்சிகளை அச்சுப் பிசகாமல் அப்படியே கண் முன் நிறுத்தும் ஓவியர்களில் முதன்மையானவர் எட்வர்ட் ஹாப்பர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாப்பர் 19-ம் நூற்றாண்டில் நடந்த நகரமயமாக்கல், நவீனமயமாக்கல் நிகழ்வுகளால் அதிக தாக்கத்துக்கு உள்ளானார். அதன் விளைவு நகர்ப்புற காட்சிகளையும், நவீன வாழ்க்கை முறையையும் தனது ஓவியங்களில் அதிகமாகப் பதிவு 
செய்தார். அதேசமயம் கிராமப்புற வாழ்க்கையையும் இவர் விடவில்லை. இவருடைய ஓவியங்களை நகர்ப்புற நவீன வாழ்க்கையும், கிராமப்புற வாழ்க்கையும் என இரண்டு வகையான சட்டங்களுக்குள் அடக்கிவிடலாம். எப்படி ஒரு நூற்றாண்டு கால மாற்றம் அரங்கேறியிருக்கிறது என்பதை இவருடைய ஓவியங்களை எல்லாம் ஒரு முறை ஆழமாகப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு தத்ரூபமாக காட்சிகளை வரைந்திருக்கிறார் ஹாப்பர்.

நியூயார்க்கில் பிறந்தாலும் இவருடைய பரம்பரை வேர் டச்சுக்குச் சொந்தமானது. நல்ல வசதியான குடும்பம். அதனாலேயே நகர்ப்புற வாழ்க்கையை நெருங்கி அனுபவிக்கும் வாய்ப்பு இவருக்கு நன்றாகவே கிடைத்தது. ஆனால், இவருடைய குடும்பம் மிகவும் ஒழுக்கமாகவும் கடுமையாகவும் இருந்ததால், அவ்வப்போது அந்த வாழ்க்கையிலிருந்து விலகி சாமானிய மக்களின் வாழ்க்கையையும் அவர் பார்க்க ஆரம்பித்தார். இரண்டு விதமான வாழ்க்கையும் இவரது ஓவியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடியும்.

x