பால்யம் மணக்கும் பத்திகள்


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

மகிழம்பூ மணக்கும் தெரு
- கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - மயிலாடுதுறை இளையபாரதி
வெளியீடு - கவி ஓவியா வெளியீடு
தொடர்புக்கு:
கவி ஓவியா பதிப்பகம்
சென்னை - 11
போன் - 98409 12010
விலை: 110 ரூபாய்

வழக்கமான கவிஞர்களுக்கே உரிய மழை வெயில் ரசிக்கிற, சிறகு பிய்ந்த பட்டாம்பூச்சிக்கு அழுகிற, உடையும் நீர்க்குமிழிக்கு பதறுகிற மனம் கொண்ட அழகியல் கவிதைகள்தான். ஆனாலும் ஆசிரியர் தனித்துத் தெரிவது தனது கிராமத்து வாழ்வினைக் குறித்த பாசாங்கற்ற பதிவுகளால். சொற்ப எண்ணிகையில் அடங்கிவிடும் அக்கவிதைகள் அதற்கான இலக்கணத்தை மீறினாலும்  சொல்லப்படும் உண்மையினால் உடனே ஒட்டுகின்றன மனதில்.

’மனசு கேக்கலியே’ என்ற தலைப்பிலான கவிதை தன் கவிதைத் தன்மையை மீறி சிறு வாழ்வினைக் காட்டி கண் முன் நிற்கிறது. கிராமத்துப் பெற்றோர்களின் கடைசிக் கால விவரணையாக, நிலம் விற்று காசாக்கி, கிராமம் விட்டு இடம் பெயர்ந்து நகரத்துக்குச் சென்றுவிட்ட மூத்த மகனுடன் இணைந்துவிட்ட வாழ்வை வலியுடன் பேசுகிறது. கூடவே, கன்று ஈன்ற மாடுகள் இரண்டையும் மகளிடம் கொண்டு விட்டதையும் சொல்லும் அக்கவிதை  கையறு நிலையிலான வயதான பெற்றோர்களின் அவலத்தை முகத்தில் அறைந்து பேசுகிறது. முத்தாய்ப்பாக

x