பேசிக்கிட்டாங்க...


நாகர்கோவில்

டவுன் பஸ்ஸில் நடத்துநரும் இளைஞரும்...  
``அண்ணே...ரயில்வே ஸ்டேஷன் போகுமா?''
``ஏம்பா... போகாது போகாதுன்னு சொன்னது உன்  காதுல விழலையா?''
``ஏதோ ஊருக்குப் போற அவசரத்துல சரியா  கவனிக்காம விட்டுட்டேன்...''
``காலங்காத்தாலே இப்படி மப்புல இருந்தா எப்படி கவனிப்பே...''
``தீபாவளிலண்ணே...''
``ஓஹோ... அப்ப   எங்க உயிரையும் வாங்காம விட மாட்டீங்க இல்லியா? எது எப்படியோ... நீங்க இப்பமே ஆரம்பிச்சாதான் 'டாஸ்மாக்' டார்கெட்டையும் அச்சீவ் பண்ண முடியும் என்ஜாய்... என்ஜாய்...''
- பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி

வேலூர்     
       
ஆரணி செல்லும் தனியார் பஸ்ஸில் பயணியும், கண்டக்டரும்...
``ஏம்ப்பா கண்டக்டர்... நீயும்,டிரைவரும் யூத்துதானே...பலதரப்பட்ட பயணிகள் வர்ற பஸ்ஸூல இப்படியா சோகப்பாட்டை போடுவீங்க?’’
``ரெண்டு பேருக்குமே லவ் ஃபெயிலியர் சார்... அந்த சோகத்தை மறைக்கத்தான்...’’
``அது சரி! இப்ப ஸ்கூல் படிக்கற சின்னப் பசங்ககூட நாலஞ்சு கேர்ள் ஃப்ரெண்ட் வெச்சிருக்கானுங்க. நீங்க இன்னும் தேவதாஸ் காலத்துலே இருக்கீங்களே...’’
``கிண்டல் பண்ணாதீங்க சார்... எங்க காதல் தெய்வீகமானது தெரியுமா?’’
``அதுக்குப் போய் தாஜ்மகாலோ,கோயிலோ கட்டுய்யா... இருக்கற சோகத்துல எங்களை ஏன் இப்படி பாடாய் படுத்தறே...”
  - வேலூர், வெ.இராம்குமார்

காவல்கிணறு

x