ஆரிநத்தம்
பேருந்து நிறுத்த டீக்கடையில்...
``என்ன மாஸ்டர்... அனுமதி இல்லாம இவ்வளவு பெரிய பேனரை கடையில வெச்சிருக்கீங்க?''
``பேனரா... எங்கே? கடைக்கு நேம் போர்டே வைக்கலை... இதுல பேனர் வெச்சிருக்கேன்னு பீதிய கிளப்புறீங்களே...''
``நல்லா பாருங்க மாஸ்டர்... சுவத்துல ஆணியடிச்சி மாட்டியிருக்கீங்களே..!''
``ஓ... அதைச் சொல்றீங்களா..? அது, அந்த நகைக் கடையில நகைச் சீட்டு போட்டதுக்காக கொடுத்த மாச காலண்டருங்க. அந்த லகுட பாண்டிகள் கொடுக்கிற காலண்டர்கள் எப்பவுமே கொஞ்சம் பெருசா பேனர் சைசுக்குத்தான் இருக்குது.''
(இருவரும் சிரித்தபடி சமாதானமாகிறார்கள்)
- ஆரிநத்தம், செ.விஜயன்
திருப்பூர்