சிலேடை ஷேக்ஸ்பியர் கமல்!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

மீண்டும் துர்சொப்பனங்கள் துரத்தத் தொடங்கியிருந்தன பாச்சாவை. சாலை ஓரங்கள், பிளாட்பாரங்கள் என வானுயர வளர்ந்து நிற்கும் பேனர்கள் மீது, பறக்கும் பைக் இடித்து, பாச்சா வானிலிருந்து விழுவதுபோல வந்த கனவு அவனை படுக்கையிலிருந்து கடாசிவிட்டிருந்தது.

வழக்கமான சுய எள்ளலையெல்லாம் மறந்து சுபஸ்ரீயின் மரணத்தை நினைத்து துயரத்தில் ஆழ்ந்தான் பாச்சா. கேலியும் கிண்டலுமாகப் பல அரசியல்வாதிகளைக் கடந்துவந்தாலும், தங்கள் அரசியல் லாபத்துக்காகக் குற்றவுணர்ச்சியே இல்லாமல் விளம்பரம் தேடிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளை நினைக்க கோபம் எழுந்தது. மனதுக்குள்ளேயே அவர்களை வாழ்த்தியபடி(!) அன்றைய கணக்கைத் தொடங்கினான்.

முதலில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஏதோ கிராமத்துத் திருவிழாவில் இருக்கிறார் என்றார்கள் தொண்டரடிப் பொடிகள். பால் விலை உயர்வு சமயத்தில் அவரிடம் பட்ட பாடு நினைவில் இருந்ததால், இந்த முறை வண்டியிலிருந்து இறங்கிய பின்னரும் முன்னெச்சரிக்கையுடன் ஹெல்மெட் அணிந்தே சென்றான் பாச்சா.

x