பேசிக்கிட்டாங்க...


தஞ்சாவூர்

தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருவர்...
“இப்படி நம்பள அலைக்கழிக்க வைக்க ஆரம்பிச்சிட்டாங்களே... இனி நவீனப் பேருந்து நிலையம் எப்போ கட்டி முடிக்கப்போறாங்களோ... அப்பா... சாமி...”
“டேய்... சீர்மிகு தஞ்சாவூர் ஆகணும்னா கொஞ்சம் சிரமத்தைப் பொறுத்துதான் ஆகணும்...”
“ஆமா, நீ தற்காலிக டீக்கடை ஏதாச்சும் வைக்கப் போறியா?”
“அட! எப்படிடா கரெக்ட்டா கண்டுபிடிச்சே!?”
“நீ எப்பவுமே சுயநலமாத்தானே பேசுவே...”
“அடப்போடா! இந்தக் காலத்துல எவன் பொது நலமா பேசறான்... சிந்திக்கிறான்...”
- அய்யாறு, ச.புகழேந்தி

தஞ்சாவூர்

வங்கி ஊழியர் காலனியில், மொட்டைமாடியில் நிற்பவரும் வந்தவரும்...
“மொட்டைமாடியில என்ன சார் பண்றீங்க?”
“வடகம் வத்தல் காய வெச்சிருக்காங்க! காக்கா குருவி லேண்ட் ஆகாம, பார்த்து விரட்டிட்டு இருக்கேன்!”
“கீழே வாங்க சார்! அதுங்க முடிஞ்சவரை சாப்பிட்டுட்டுப் போகட்டும்! அந்த ராசியில நாம அனுப்புற ராக்கெட்டுகள், இனிமேலாவது கரெக்ட்டா லேண்ட் ஆகட்டும்!”
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

x