கேனப்பய ஊர்ல கோவணாண்டி நாட்டாம!


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

சேலத்துக்கும் சங்ககிரிக்கும் இடையில இருக்குது  அந்த ஊரு. இந்த ஊருல சாதிவிட்டு சாதி காதலிச்சு ஓடிப்போய் கண்ணாலம் கட்டிக்கிறவங்க ஊருக்குள்ள வரோணும்னா ஊர் சுடுகாட்டுக்கு வந்து குத்தம் குடுக்கோணும். 

அது என்ன குத்தம் குடுக்குறதுன்னு கேக்குறீங்களா... நடுநிசியில பொண்ணையும் மாப்ளையவும் சுடுகாட்டுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அங்க ரெண்டு செம்புக் குடத்த ரெண்டடி இடைவெளியில வெச்சு, பொண்ண ஒவ்வொரு காலையும் ஒரு குடத்துமேல வெச்சு ஏறி நிக்கச் சொல்லுவாங்க. அப்படி நின்னதும் மாப்ளக்காரன் அந்தப் பொண்ணோட காலுக்குள்ள மூணு தடவ புகுந்து வரோணும். அப்படி வந்த பின்னாடி அந்த இடத்துலயே தேங்காய், பழம் வெச்சு ஊதுபத்தி கொளுத்திட்டு ரொக்கமா பத்தாயிரம் ரூபாய எடுத்து ஊரு நாட்டாமைக்கிட்ட குடுக்கோணும். அப்டியே பழைய தாலியக் கழற்றி வீசிட்டு அந்த இடத்துலயே புதுத் தாலி கட்டிக்கோணும். இப்டி செஞ்சுட்டா புதுமண ஜோடி ஊருக்குள்ள இருக்கலாம். 

இருபது வருசத்துக்கு முன்னால அப்படி ஒரு காதல் ஜோடி, நாட்டாமைக்கு பத்தாயிரம் தீர்வையும் கட்டிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருச்சு. இது வெவகாரமானது தெரிஞ்சதும் ஒரெட்டு பாத்துட்டு வருவோம்னு என்னோட ஃபிலிம் கேமராவ தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு கெளம்பிட்டேன்.

x