சிக்குனான் சிங்கர்  சீனி!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அழைப்பு மணி ஒலிச்சுது. யாரா இருக்கும்னு யோசிச்சுகிட்டே கதவைத் திறந்தேன்.
 
வாட்டசாட்டமா ஒரு பையன். தெருவுல பார்த்த ஞாபகம்... கேபிள் செக் பண்ண வந்திருக்கானோ... "என்னப்பா.. கேபிள்லாம் சரியா வருது”ன்னு கதவை மூடப் போனேன். குறுக்கே கை வச்சு தடுத்தான்.

“ஸார்... எம்பேர் பிரபு. என்னைத் தெரியுதா..?”ன்னு கேட்டான். “தெருவுல பார்த்தாப்ல இருக்கு”ன்னு அசடு வழிஞ்சேன். “நம்ம தெரு கோயிலுக்கு திருவிழா. நம்ம பசங்க கலெக்‌ஷனுக்கு வந்தாங்க... வீடு பூட்டியிருக்குன்னு திரும்பிட்டாங்க”ன்னு சொன்னான்.
கிச்சன்லேர்ந்து தட்டு விழுவுற சிக்னல் கேட்டுச்சு. வீட்டுல ரகசியமா எனக்குத் தகவல் சொல்ல இதான் டெக்னிக். புரிஞ்சுக்கிட்டு கிச்சனுக்குப் போனேன். “நாலஞ்சு பேர் வந்தாங்க. 50 ரூபா குடுத்தேன்... மூஞ்சி சுளிச்சுட்டு வாங்காம போயிட்டாங்க”ன்னு வீட்டம்மா சொன்னாங்க. வெளியே வந்து பிரபுவைப் பார்த்தேன். “வீட்ல கொடுத்தாங்களாம்; வாங்காம போயிட்டாங்களாமே”ன்னு சொன்னேன்.

“சார்... துட்டுலாம் வேணாம். விழா கமிட்டில ஒங்க பேரையும் போட்டுருக்கோம். இந்த அபார்ட்மென்ட்ல நீங்கதான் முழுப் பொறுப்புன்னு தெரியும். உங்க கைடன்ஸ் வேணும்...”னு வெண்ணையா குழைஞ்சான். மஞ்சள் நோட்டிஸ் ஒண்ணை எடுத்துக் காமிச்சான். அதுல எங்க அபார்ட்மென்ட் பேர்... எம்பேர் எல்லாம் இருந்துச்சு. “ஹிஹி... நான் வந்து... இதெல்லாம்...”னு இழுத்தேன். பய என்னைப் பேசவே விடலை. “ கூட நில்லுங்க சார். அது போதும். உங்கள ஒரு போட்டோ எடுத்துக்கவா...”ன்னு சொன்னவன் என்னோட பர்மிஷன் இல்லாமலே மொபைல்ல ஒரு க்ளிக் அடிச்சான்.

x