போதை தரும் புத்தக வாசம்


ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

மனிதனுக்கு போதை தரும் பல விஷயங்கள் இந்த பூமியில் உண்டு.  ஆனால், அவற்றின் பலன்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவே. போதை கொள்வதால் ஆரோக்கியமான பலன் கிடைக்கும் என்றால் அது புத்தகத்தின் மீதான போதை என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

பெண்ணைப் பார்த்துக்கொண்டே நடந்துபோய் குழியில் விழுந்த காலம் உண்டு. இப்போது செல்போனைப் பார்த்துக்கொண்டே குழியில் விழுவதும் நடக்கிறது. ஒருகாலத்தில் புத்தகத்தின் மீதும் இப்படிப் பைத்தியமாய் இருந்தவர்கள் இருக்கிறார்கள். நல்ல புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டால் நேரம் காலம் எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு காலத்தில் புத்தகம் படிப்பது மிகவும் பாராட்டத்தக்க செயலாக இருந்தது.

குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் புத்தகத்தின் மீதான ஆர்வம் மிகவும் அதிகமாய் இருந்தது. நூலகங்கள், பதிப்பகங்கள் மிக அதிகமாக முளைத்தன. எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு புத்தகத்தைத் தேடி படித்தார்கள். கைதிகள் சிறைகளில் புத்தகங்கள் படித்தார்கள். ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் புத்தகம் வாசித்தார்கள். படித்த புத்தகங்களைப் பற்றி நாளெல்லாம் விவாதித்துக்கொள்வார்கள். கதை வாசிப்புக் கூட்டங்களில் பெருந்திரலான மக்கள் கூடுவார்கள்.

x