பேசிக்கிட்டாங்க...


கோபி

ஒரு டீக்கடையில் அரசியல்வாதிகள் இருவர்...
``வேலூர் போயிட்டு வந்தியே... கள நிலவரம் எப்படி இருக்கு?’’
``சொல்லற மாதிரி இல்லைணே... மக்கள் பணத்துக்கு அடிமையாகிட்டாங்க... கட்சி எது வேட்பாளர் யார்னு எல்லாம் பார்க்கறது இல்ல. யார் எவ்வளவு தர்றாங்கனுதான் பார்க்கறாங்க..?’’
``நம்ம கட்சி ஜெயிக்குமா...ஜெயிக்காதா?’’
``சொல்ல முடியாதுணே... மக்கள் மனசுல என்ன இருக்குனு ரிசல்ட் வந்தாதான் தெரியும்!’’
``அந்த வெங்காயம் எங்களுக்கும் தெரியும்... எப்ப பாரு அவரு மாதிரியே பேசறது...’’
``எவரு மாதிரி..?’’
``நீயெல்லாம் அரசியலுக்கு லாயக்கே இல்ல... உன்னை எதுக்கு காட்பாடிக்கு அனுப்பி வச்சங்களோ... அதான் புரியலை!’’
(மற்றவர் குழப்பத்துடன் நகர்கிறார்)
கோபி, அவ்வை.கே.சஞ்சீவிபாரதி

சீர்காழி

 டாஸ்மாக் கடையில் குடிமகனும் கடைக்காரரும்...
``ஒரு குவாட்டர் கேட்டு எவ்வளவு நேரமாதான் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டிகிட்டு நிக்கறது சார்...''
``கூட்டம் ஜாஸ்தியா இருக்குல்ல... கொஞ்சம் வெயிட் பண்ணிதான் வாங்கிட்டுப் போறது...''
``கூட்டம் வர்றப்பதானேங்க ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை மாத்த முடியும்..!
``அப்போ நீ கொடுக்கறது கள்ளநோட்டா..?''
``நல்ல நோட்டுதாங்க... வேணும்னா செக் பண்ணிக்கோங்க... உங்களுக்கு லைட்டா பிரஷ்ஷரை ஏத்திவிட்டாதானே சுறுசுறுப்பா வேலை பார்ப்பீங்க. அதான்..!''
(இருவரிடமும் சிரிப்பு)
சீர்காழி, வி.வெங்கட்

x