ஸாரி... கொஞ்சம் ஓவர்!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

சும்மா இருந்திருக்கலாம். ஆனா, விதி யார விட்டுச்சு. ஃப்ரெண்டோட அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்கன்னு கேள்விப்பட்டதும் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்க்கப் போனோம். வழக்கமா எடுக்கிற பீபி மருந்தை ரெண்டு நாளா சாப்பிடாம விட்டுட்டாங்க. பெட்ல வச்சு ட்ரிப்ஸ் ஏத்தினதும் சரியாயிட்டாங்க. பார்த்துட்டு வெளியே வரப்போ எதிர்ல இருந்த வெயிட் மெஷின் கண்ணுல பட்டுருச்சு.

“ஒன்னோட வெயிட் எவ்ளோ?”ன்னு ஒருத்தனுக்கு ஒருத்தன் கேட்டுக்கிட்டு ஏறி நின்னோம். “டேய்... முள்ளு மூணு தடவ சுத்துச்சுரா”னு சின்னப் புள்ள மாதிரி கலாட்டா. “நீ நின்னா ஒரே நேரத்துல ரெண்டு பேரு நிக்காதீங்கன்னுசொல்லுமே”னு பதிலுக்கு ஒருத்தன் கலாய்ச்சான். ஒரு ஆர்வத்துல நானும் ஏறி நின்னு வெயிட் பார்த்துட்டு அரண்டுட்டேன்.
டப்புனு கீழே குதிச்சதும், “நில்ரா மறுபடி... நான் பார்க்கல”ன்னு சொல்லி நிக்க வச்சாங்க. “மச்சி... என்னடா இது 92 கிலோ காட்டுது. ஓவர் வெயிட்ரா... உன்னோட ஹைட் எவ்ளோ?”ன்னாங்க. சொன்னதும் “ரொம்பவே அதிகம். நடந்தா மூச்சு வாங்குறப்பயே நினச்சேன்”னு பில்டப் பண்ணாங்க.

“லிஃப்ட் வொர்க் பண்ணலன்னு நாலு மாடி ஏறினா மூச்சு வாங்காதாடா?”ன்னு பரிதாபமா கேட்டேன். என் பேச்சை எவனும் கேக்கல. அங்கருந்தே என் மிசஸுக்கு போன் அடிச்சுட்டாங்க. “கவனமாப் பார்த்துக்குங்க. ஓவரோ ஓவர் வெயிட்”னு புண்ணியவானுங்க போட்டு விட்டுட்டானுங்க.

x