விமர்சனக் கலைஞன் புரூகல்


ஜெ.சரவணன்

நெதர்லாந்து ஓவியர் பீட்டர் புரூகல் தி எல்டர் வரைந்த ஓவியங்கள் அனைத்துமே ஓவியக் கலையின் உச்சம். இவரைப் போல நிலக்காட்சி ஓவியங்களை வரைந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

இன்று சிலரது ஓவியங்களைப் பல கோடிக்கு மதிக்கிறார்கள். ஆனால், அன்று அந்த ஓவியர்கள் தூரிகை வாங்கக்கூட வசதி இல்லாமல் இருந்திருப்பார்கள். அப்படியான சூழலில், ஓவியங்கள் வரையப் பயன்படுத்தும் கேன்வாஸை உபயோகப்படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் ஓவியர்கள். புரூகலும் அப்படித்தான். அவருடைய கேன்வாஸில் எந்த ஒரு இடத்தையும் வெறுமனே வண்ணம் தீட்டி நிரப்ப மாட்டார். அத்தனை இடத்தையும் ஓவியங்கள் ஆக்கிரமித்திருக்கும்.

ஓவியத்தில் புரூகல் எடுத்தாளும் காட்சிக்கோணங்கள் அலாதியானவை. ஒரே ஓவியத்தில் மேல் கீழ், முன் பின் என அந்தக் காட்சியின் மொத்த இயக்கத்தையும் அடக்கிவிடுவார். குறிப்பாக அவர் வரைந்த ஓவியங்களில் இன்னமும் ஆச்சரியம் விலகாதவை எனில், Netherlandish Proverbs, Children's Games, மற்றும் The Procession to Calvary ஆகிய ஓவியங்களைச் சொல்லலாம். இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் அருங்காட்சியகத்தின் நீண்ட நெடும் சுவர்களை முழுக்க ஆக்கிரமிக்கும் வகையிலான ஓவியங்கள் ஆகும்.

x