நண்பேண்டா


ரிஷபன்

எப்பவுமே நல்லாத் தூங்கிக்கிட்டிருக்கும்போதுதான் எனக்கு போன் கால்ஸ் வரும். அது என்னோட பேரு ராசி. அதுவும் ஞாயிறு மதியம் அக்கடான்னு ஓஞ்சு படுக்கிறப்போ. அதுல பாதி கஸ்டமர் கேர். இந்த ட்யூன் வேணுமா... இந்த ஸ்கீம் வேணுமான்னு. அப்டியே பத்திக்கிட்டு வரும்.

அன்னைக்கு அப்படித்தான் ஃப்ரெண்டு ஒருத்தன் ரொம்ப நாளைக்கு அப்புறம் லைன்ல வந்தான். நம்பர பார்த்தப்பவே எனக்கு பகீர்னுச்சு.  அய்யோ... இவனா... பள்ளிக்கூடம் படிச்ச நாள்லருந்து நமக்கு செலவு இழுத்துவிடுற பயலாச்சேன்னு யோசிச்சேன். ஆனா, போனை எடுக்காம இருந்தாலும் விடமாட்டான்; சளைக்காம அடிச்சுக்கிட்டே இருப்பான். அதனால வேற வழியே இல்லாம போனை எடுத்துத் தொலைச்சேன்.

 “என்னடா... தூங்குறியா... ஹிஹி”ன்னு சிரிச்சவன்,  “ஒங்கூர்லதான் இருக்கேன் இப்போ”ன்னு அடுத்த அணு குண்டைப் போட்டான். எங்கன்னு விசாரிச்சா கோயில்ல நிக்கிறானாம்.  “ஸாரிடா நண்பா... ரெண்டு ஃப்ரெண்ட்ஸோட வந்தேன். இல்லாட்டி நேரா நம்ம வீட்டுக்கே வண்டிய விட்டுருப்பேன். அவசரப் பயணம். இப்படியே திரும்பிருவோம்”னான். நல்லதாப் போச்சுன்னு மூச்சுவிட்டா,  “எந்திரிச்சு வாடா... உனக்குத்தான் நம்மூரு கோயில பத்தி விலாவாரியாத் தெரியுமே. இவனுங்க டீடெய்லா பாக்கணுமாம். கார்லதான் வந்துருக்கோம். நான் வேணா நேரா உங்க வீட்டுக்கு வந்துரவா பிக்கப் பண்ணிக்க”ன்னான்.

x