உலகம் வியந்த ஓவியம்!


ஜெ.சரவணன்

டைட்டானிக் கப்பல் விபத்துதான் உலகத்தை உலுக்கிய ஒரு கடல் விபத்தாக இதுவரை அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுதான் பிரெஞ்சு நாட்டின் மெடுசா போர்க்கப்பல்.

இந்த மெடுசா கப்பல் விபத்துக்குள்ளான கோர சம்பவத்தை தியோடர் கெரிகால்ட் என்ற பிரெஞ்ச் ஓவியர் ஓவியமாக வரைந்தார். இதை வரைய அவர் எடுத்துக்கொண்ட உழைப்பு அசாத்தியமானது. விபத்தில் உயிர் தப்பியவர்களிடம் நேர்காணல் கண்டார்.

கப்பல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். பலியானோரின் உடல்களை வரையும்போது அவற்றின் வண்ணங்களை உறுதி செய்ய மருத்துவமனைகளுக்குச் சென்று பிணங்களை ஆய்வு செய்தார். இப்படிப் பல்வேறு முயற்சிகளுக்கு அப்பால்தான்  உலகம் வியந்த ஓவியம் உருவானது.

x