பணிப்பெண்ணின் ரத்தின தோடு!


ஜெ.சரவணன்

பொதுவாக படைப்புகளின் வழியே படைப்பாளிகள் தங்களுடைய அனுபவம், வாழ்க்கை, வலி போன்றவற்றை பிரதிபலிப்பது வழக்கம். அது அவர்கள்  குறித்தும் இருக்கலாம், பிறர் குறித்தும் இருக்கலாம். அதன் மூலம் படைப்பாளியை எடை போடலாம். ஆனால், ஓவியங்களை வைத்து அதை வரைந்த ஓவியரை எடை போடுவது என்பது முடியாத காரியம். ஏனெனில் ஓவியங்களில் யாரும் எதையும் குறிப்பாக உணர்த்துவதில்லை. ஓவியங்கள் மவுன சாட்சிகள் என்பதால் அதில் பார்வையாளரே ஜட்ஜாக மாறுகிறார்.

புகழ்பெற்ற டட்சு ஓவியர் ஜோஹன்னஸ் வெர்மீரின் ஓவியங்களில் மிக முக்கியமான ஓவியம்  ‘Girl With the Pearl Earing’. மிகச்சில ஓவியங்களையே வரைந்த இவரை உலகப் புகழ்பெற்ற ஓவியராக மாற்றியது இந்த ஒரு ஓவியம். இதில் உள்ள பணிப்பெண்ணுக்கும் ஓவியர் ஜோஹன்னஸுக்குமான உறவுதான் இங்கே இந்த ஓவியத்தை முக்கியத்துவம் பெற வைக்கிறது.

கலைஞர்கள் பலரின் சாபமோ என்னவோ, பெரும்பாலும் சொந்த குடும்பத்தினரால் அவர்களது கலைக்கு எந்த மரியாதையும் கிடைக்காது. இதனால் பலருக்கு குடும்ப வாழ்க்கை சூன்யமானதாகவே மாறிவிடும். அதனாலேயே அவர்கள் தங்களுக்கான உறவை குடும்பத்துக்கு வெளியே தேடுவார்கள். பல சமயங்களில் அந்த உறவுகள் அவர்களது உதவியாளராகவோ பணிப்பெண்ணாகவோ இருப்பார்கள்.

x