சுமை தாங்கிகளின் மறுபக்கம்


ஜெ.சரவணன்

உலகில் எல்லோருமே ஏதோ ஒரு சுமையைச் சுமந்துகொண்டுதான் இருக்கிறோம். அது குடும்பமாக இருக்கலாம், சுய லட்சியமாக இருக்கலாம், குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். எவையெல்லாம் நம்மை துன்பத்துக்கு உள்ளாக்குகிறதோ அவையெல்லாமே சுமைகள்தான்.

ஆனால், சுமை தாங்கிகளின் சுமையோ, அதற்குப் பின்னால் இருக்கும் வலியோ யாருக்கும் புலப்படாது. யாருக்கும் புரியவும் புரியாது. ஏன் சுமையைச் சுமந்துகொண்டிருப்பவருக்கும் கூடத் தெரியாது. எதற்காக இந்தச் சுமையை நாம் சுமக்கிறோம் என்று. இதை இறக்கி வைத்துவிட்டால் நிம்மதியாக இருக்குமே என்பது தெரிந்தாலும் அதை இறக்கி வைக்கவும் முடியாது என்பது இந்த மானிட வாழ்க்கையில் இருக்கும் முரண்பாடு.

இதைத்தான் உலகப் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவரான டியாகோ ரிவேராவின் ‘The Flower Carrier’ ஓவியம் நமக்கு உணர்த்துகிறது. தன்னைவிட பெரிய அளவிலான ஒரு கூடையை முதுகில் சுமந்துகொண்டிருக்கும் வெள்ளை நிற உடையும் தொப்பியும் அணிந்த மனிதன், அந்தக் கூடையின் எடை தாங்க முடியாமல், கூடையைத் தூக்க முடியாமல் கீழே மண்டியிட்டு விழுந்து கிடக்கிறான். எழ முயலும் அவனுக்கு அவனுடைய மனைவி உதவி செய்கிறாள். கூடை நிறைய அழகான மலர்கள். இதுதான் ஓவியம்.

x