அடங்க மறுத்த ஸ்பானியர்கள்!


ஜெ.சரவணன்

ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறைக்கு எப்போதுமே மக்கள் அடிபணிந்துகொண்டு இருக்க மாட்டார்கள் என்பது வரலாற்றில் பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பெனின்சுலா போரிலும் நிகழ்ந்துள்ளது.

பெனின்சுலாவைக் கைப்பற்ற ஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் இடையில் கடும் போட்டி. மாவீரன் என்று போற்றப்படும் நெப்போலியன் போனபர்ட்டின் படைகள் ஸ்பானியர்கள் மீதான அடக்குமுறை ஆட்டத்தை 1807-ல் கட்டவிழ்த்துவிட்டது. பெனின்சுலா போர் ஏழு ஆண்டுகள் நடந்தது. வரலாற்றில் தேசச் சுதந்திரத்துக்காக நடந்த ஆரம்பகட்ட போர்களில் ஒன்றாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போரின் இறுதியில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார். ஆனால், இந்தப் போரில் ஸ்பானியர்கள் மீது நெப்போலியனின் பிரான்சு படைகள் நடத்திய வெறியாட்டம், சொல்லில் அடங்காதவை. அவற்றை பிரான்சிஸ்கோ கோயா என்ற புகழ்பெற்ற ஸ்பானிய ஓவியர் வரைந்தார். இவர் பெனின்சுலா போர் தொடர்பான நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.

ஸ்பானியர்களை ரத்தம் தெறிக்க கொன்று குவித்தது, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை முறைகள், தலையில்லாத, கை கால்கள் இல்லாத உடல்களை இலைகளற்ற மரத்தில் சிலைகளைப் போல நிறுத்தியது என அத்தனை ஓவியங்களும் போரின் வலிகளையும் கொடூரங்களையும் இன்றும் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

x