கோடைக் கனவின் வறட்சியான நிறங்கள்


கணேசகுமாரன்

நிலா ரசிகன் என்ற பெயரில் 3 கவிதைத் தொகுப்புகளும் 2 கதைத் தொகுப்புகளும் எழுதிய ராஜேஷ் வைரபாண்டியன், தன் இயற்பெயரில் கொண்டு வந்திருக்கும் தொகுப்பே வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி. ஓவியத்திலிருந்து உதிந்த சொற்களாய் வாசகர் முன் விரியும் அழகியலே இத்தொகுப்பின் பலம் எனலாம். அதேபோல் ஒவ்வொரு கவிதையிலும் தென்படும் சின்னச் சின்னதான வார்த்தைகள் பெரும் உலகை வண்ணமயமாய் வாசகர் முன் திறக்கும் ஆச்சரியமும் நிகழ்கிறது. ‘ஒரு சொல் போதுமானதாய் இருக்கிறது’ எனத் தொடங்கும் கவிதையில்

கடலடியில் அசைகின்ற ஆள்உயரத் தாவரங்களின்

இலைகளின் அடியில் ஒண்டியிருக்கின்ற

x