ரிஷபன்
என்னதான் இறுக்கிக் கட்டிக்கிட்டாலும் அரை அடி தள்ளி நிற்க வைக்கிற தொப்பையோட எதிர் வீட்டுக்காரர் என்னைக் கட்டிக்கிட்டு கண்ணீர் விட்டார். அது வேறொண்ணுமில்ல... வீட்டைக் காலி பண்ணிட்டு சென்னைக்குப் போறார். இதுவும் அவருக்கு சொந்த வீடுதான். சென்னையிலயும் பார்ட்டிக்கு சொந்தமா வீடு வாசல்லாம் இருக்கு.
“தாயா புள்ளையா பழகிட்டு உங்கள பிரிஞ்சு போக மனசே இல்ல சார்...”னு அழுதாரு. இப்படி மூக்க சிந்துற மனுஷன், பேசாம டிரான்ஸ்ஃபர மறுத்துட்டு இங்கனையே இருக்க வேண்டியதுதானேன்னு உள்ளுக்குள்ள நெனச்சுக்கிட்டு நானும் லேசா கண்ண கசக்குனேன். அதுதான் மகா தப்பா போச்சு. “நீங்களே நல்ல ஆளா பாத்து இந்த வீட்ல வாடகைக்கு வைங்க ப்ளீஸ்...”னு கெஞ்சினாரு மனுஷன். சரினு நானும் சம்மதிச்சேன்.
பிரச்சினை அங்கதான் ஆரம்பிச்சுது. வாடகைக்கு ஆள் வைக்கிறதுல என்ன பெருசா கஷ்டம் வந்துடப் போகுதுன்னு நான் நெனச்சது தப்பா போச்சு. எங்களுக்கு டாட்டா காட்டிட்டுப் போன மனுஷன், போற போக்குல அபார்ட்மென்ட் வாசல்ல ‘டு லெட்’ போர்டை மாட்டி வெச்சிட்டு போயிட்டார்.