உலகம் சுற்றிய சிஸ்டைன் மடோனா!


ஜெ.சரவணன்

உலகப் புகழ்பெற்ற ஒரு சில ஓவியங்களில்  ‘சிஸ்டைன் மடோனா’ ஓவியமும் ஒன்று. குழந்தை ஏசுவின் தாய் மேரியை மடோனா என்று அழைப்பார்கள். மடோனா  என்றால் இத்தாலியில் ‘my lady' என்று அர்த்தம்.

சிஸ்டைன் மடோனா ஓவியத்தை ஓவியர் ரஃபேல் சன்ஸியோ 1512-ல் வரைந்தார். இந்த ஓவியத்தை போப் இரண்டாம் ஜூலியஸ், பியாசென்சாவில் உள்ள சான் சிஸ்டோ தேவாலயத்துக்காக வரையச் சொன்னார். பல மடோனா ஓவியங்களை வரைந்த ரஃபேல் வரைந்த கடைசி மடோனா ஓவியம் இதுதான். 

இந்த ஓவியத்தில் மடோனா குழந்தை ஏசுவைக் கையில் ஏந்தி இருக்க, புனிதர்களான போப் சிக்ஸ்டஸ், பார்பரா இருவரும் அவர் அருகே நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கீழே இரண்டு குட்டி தேவதைகளும் இடம்பெற்றுள்ளனர். போப் சிக்ஸ்டஸ் மடோனா விடம் எதையோ சொல்ல நினைக்கிறார். பார்பரா மகிழ்ச்சியற்றவராக மடோனாவுக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்கிறார்.

x