குவர்னிகா- கொடூரத்தைச் சொல்லும் ஓவியம்


ஜெ.சரவணன்

வரலாற்றில் இதுவரை எவ்வளவோ பேரழிவுகள் மனிதனால் நடத்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய கொடூரமான பேரழிவுகளைப் பல்வேறு கலைஞர்கள் தங்களின் கலை வழியே விமர்சித்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ வரைந்த ‘குவர்னிகா’ ஓவியத்துக்குக் கிடைத்த வரவேற்பு வேறு எந்த ஓவியத்துக்கும் கிடைக்கவில்லை.

குவர்னிகா. ஸ்பெயின் நாட்டில் உள்ள மிகச் சிறிய நகரம். உழைக்கும் மக்கள் அதிகமாய் வாழ்ந்த அந்நகரம் 1937-ல் வெடி குண்டு தாக்குதலால் அழிக்கப்பட்டது. ஸ்பெயினில் நடந்துகொண்டிருந்த இடதுசாரி ஆட்சிக்கு எதிராக வலதுசாரிகள் நடத்திய தாக்குதல் இது. தாக்குதல் நடத்தியது ஹிட்லரின் நாஜி படை. கொத்துக்கொத்தாய் மக்கள் மாண்டனர். உலகில் நடந்த மிகக் கொடுமையான தாக்குதல்களில் குவர்னிகா குண்டுவெடிப்பும் ஒன்று.

குவர்னிகா குண்டுவெடிப்பின் கொடூரத்தைப் பதிவு செய்யும் நோக்கில் ஒரு ஓவியத்தை வரையுமாறு ஸ்பெயின் அரசாங்கம் பாப்லோ பிகாசோவிடம் கேட்டுக்கொண்டது. அதன்பேரில் இந்த ஓவியத்தை வரைந்தார் பிகாசோ.

x