கருவுறாத கர்ப்பிணி!


ஜெ.சரவணன்

உலகின் மிகப் புகழ்பெற்ற ஓவியங்கள் பலவும் பல புதிர்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது, 14-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியர் ஜான் வான் அய்க் என்பவர் வரைந்த ‘Arnolfini Portrait’.

வெளிர் பச்சை நிற அடர்த்தியான பெரிய கவுனில் ஒரு பெண். அந்தப் பெண்ணின் வலது கையைப் பிடித்தபடி நிற்கும் பெரிய அடர்நீல நிற கோட் போட்ட நபர் ஏதோ சைகையைக் காட்டுகிறார். இந்த ஓவியத்தைப் பார்த்தவுடனே அவள் கர்ப்பிணி என நீங்கள் நினைக்கக் கூடும். ஓவியத்தைப் பார்த்த அனைவருமே அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால், ஓவிய வரலாற்று ஆய்வாளர் எர்வின் பனோஃப்ஸ்கி என்பவர் இந்த ஓவியத்தை ஆய்வு செய்து இதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். இத்தாலியைச் சேர்ந்த வியாபாரி கியோவானி டி நிக்காலோ அர்னோல்ஃபினியும் அவரது மனைவியும் திருமண ஒப்பந்தம் செய்துகொள்ளும் காட்சி என்றார் எர்வின். 

இருவரும் ஒருவருக்கொருவர் திருமண ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும், அவர்கள் இருவரும் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் மிகுந்த ஆசையுடன் இருப்பதாகவும், அதைக் குறியீடாக உணர்த்தவே காலருகே ஒரு நாய்க்குட்டி வரையப்பட்டிருப்பதாகவும் கூறினார் எர்வின்.  

x