நிழற்சாலை


ஒளி நடனம்

எல்இடி பல்புகள்
எவ்வளவுதான் ஒளி உமிழ்ந்தாலும்
காற்றின் இசைக்கேற்ப
நடனமாடத் தெரிவதில்லை
சிறு சிம்னி
விளக்கைப் போல.
- பழ. அசோக்குமார்

ஆதிக் குடிமகன்

மலை உச்சியில் உள்ள தேநீர் கடையில்
உறையும் பனிக்கு கைகளை உரசி
சூடாக்கிக்கொண்டு
ஓரு குறுநில மன்னனைப் போல்
அமர்ந்திருக்கும் அந்த ஆதிக் குடிமகன்
தலையில் ஒரு திணை மூட்டையை
கிரீடமாகச் சூட்டிக்கொண்டிருக்கிறான்.
கைப்பையில் தேன், மலைக்கிழங்குடன்
அடிவாரச் சந்தைக்குக் கீழிறங்கும் அவனுடன்
கூடவே இடம்பெயர்ந்து வருகிறது
மண்மணக்கும் அந்த மலையும்!
- அருணாச்சல சிவா

x