பெண் கவிதைகளின் ஆவணத்துளி


கணேசகுமாரன்

கனவும் விடியும்
தொகுப்பு நூல்
தொகுப்பாளர்: அ.வெண்ணிலா
வெளியீடு: சாகித்ய அகாடமி
விலை: ரூ.200

சங்க இலக்கியம் தொடங்கி நவீன காலம் 
வரையிலான கவிதையில் பெண் கவிகளின் 
ஆளுமைப் பங்களிப்பு என்பதாய் மட்டும் இத்தொகுப்பினை கூறிவிட முடியாதபடி பெண் உலகத்தை அவர்களின் பார்வையிலே நம்மைக் காணச் செய்யும் பதிவு எனலாம். சுமாராக 55 பெண் கவிஞர்களின் படைப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. குறைந்தபட்சம் ஒருவரின் மூன்று கவிதைகள் தொகுப்பில் இடம் பெற வைப்பதே தொகுப்பாளருக்குப் பெரிய சவால்தான். அவ்விதத்தில் அ.வெண்ணிலா வென்றிருக்கிறார்.

எழுத்தில் சுதந்திரம் பதியப்பட்டிருந்தாலும் எழுதுவதற்கான சுதந்திரம் அவர்களுக்கிருந்ததா என்னும் கேள்வியுடனே இத்தொகுப்பை வாசிக்க வேண்டியிருக்கிறது. தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சுகிர்தராணியின் ஒரு கவிதை இதற்குக் கட்டியம் கூறுகிறது. இருந்தும் ஆண்களின் பார்வையில் புலப்பட்ட பெண்ணின் மார்பகம் ஒரு பெண்ணின் வலியில்
தான் இரு கண்ணீர் துளிகளாய் தேங்கித் தளும்புகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நனையும் பொருட்டு நீ முளைத்துவிட முடியாத விதை போல என்ற உத்திரவாதம் இருப்பதாலே நனைதல் சாத்தியம் என்ற சக்தி அருளானந்தத்தின் கூற்றையும் சற்றே உற்று நோக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண் கவியின் வெவ்வேறு விதமான கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றிருப்பதிலிருந்தே தொகுப்பாசிரியர் அ. வெண்ணிலாவின் கடும் உழைப்பை உணர முடிகிறது.
உதாரணமாக, இடம் பெற்றிருக்கும் உமா மகேஸ்வரியின் நான்கு கவிதைகளில் மூன்று இல்லறம் குறித்தும் ஒன்று பெண்ணுடல் அவஸ்தை குறித்தும் பேசுகிறது. இதுபோல் பலரின் வெவ்வேறு விதமான கவிதைகள் வலிகளாகவும் கோபமாகவும் தன்னிரக்கத்துடனும் வீறுகொண்டும் அலட்சியப்படுத்தியும் ஆக்ரோஷமாகவும் வெளிப்படுகின்றன. தீவிர வாசிப்பாளர்களுக்கும் சில கவிதாயினிகளின் பெயர்கள் முதன்முறை அறியப்படுவது போல் தோன்றுவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சமூகம் பெண் கவிகளுக்கு எவ்விதம் முக்கியத்துவம் அளித்திருக்கிறதென்று. அப்படி புதிதாய் அறியும் பெயர்களும் காத்திர கவிதைகள் தந்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. குட்டி ரேவதியின் ‘முலைகள்’, தாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்’ போன்ற கவிதைகள் இலக்கிய வெளியில் பரவலாகப் பலராலும் அறியப்பட்டவை. எனவே, இத்தொகுப்பில் இடம்பெறும்போது அவர்களின் வேறு சில கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலோ இடம் பெற வைத்திருந்தாலோ இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  சல்மாவின்
‘இதற்கு முன்னும் கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லையென்பதால்
நீ பெருமை கொள்ளலாம்’ 

x