மதுரை
காமராஜர் சாலையில் கையேந்தி பவன் கடையில் வாடிக்கையாளரும் கடைக்காரரும்...
``இன்னும் கொஞ்சம் சட்னி, சாம்பாரு கொடுங்க.''
``வாங்குற நாலு இட்லிக்கு எவ்வளவு சட்னி, சாம்பார் கொடுக்குறது அண்ணே?''
``ஏங்க... அதுக்குன்னு நாங்க கோடிக் கணக்குல செலவு பண்ணி இட்லி வாங்க முடியுமா?``
``அண்ணே... சட்னி, சாம்பார் எக்ஸ்ட்ரா வேணும் அவ்ளோதானே... இதுக்கு ஏண்ணே ரொம்ப பெரிய இடத்து அரசியல் பேசி யாவாரத்துல மண் அள்ளிப் போடப் பாக்குறீங்க?''
(சாப்பிட்டவரின் தட்டில் வெள்ளமாக சாம்பார் ஊற்றுகிறார் கடைக்காரர்)
மதுரை, எம்.விக்னேஷ்
புதுக்கோட்டை
தியேட்டர் டீக்கடையில் டீ மாஸ்டரும் வாடிக்கையாளரும்...
``மாஸ்டர் ஒரு டீ கொடுப்பா...''
``லைட்டா..? ஸ்ட்ராங்கா? சுகர் போட்டா... போடாமலா..?''
``நீ எதுவேணாலும் போட்டுக்கோ சாமீ... ஆனா, டெல்லியில இருக்குறது உங்க வகையறா ஆளுங்கற பாசத்துல சிங்கிள் டீக்கு ஜிஎஸ்டி மட்டும் போட்டுறாதே..!''
புதுக்கோட்டை, பழ.அசோக்குமார்