பேசிக்கிட்டாங்க..!


வளசரவாக்கம்
சலூன் ஒன்றில் பேப்பர் படிப்பவர்கள்...
``இந்த வாரம் ஏகப்பட்ட படம் ரிலீஸ் ஆகுது போலிருக்கு''
``ஆமாமா... இந்த தமிழ் ராக்கர்ஸ் ஆளுங்களும் ஓவர் டைம் வேலை பார்க்க வேண்டியிருக்கும் போலிருக்கு''
 (மற்றவர் முறைக்கிறார்)
வளசரவாக்கம், பாலாஜி சண்முகம்

கிருஷ்ணகிரி
டான்சி பூங்கா அருகில் ஒரு தம்பதி...
``என்னங்க, எனக்கு ஸ்வெட்டர் வாங்கிக்குடுங்க... ஓவரா குளுருது!''
``ரெண்டு வருசம் முந்தித்தானே வாங்கித்தந்தேன்... ஃபேட் ஓவரா ஆய்ட்டதால இப்ப ஃபிட் ஆகாம போய்டுச்சா?''
``கலாய்க்கறீங்களா... நீங்க ஸ்வெட்டர் வாங்கித்தந்து நாலு வருஷம் ஆயிடுச்சி... அதுவும் கிழிஞ்சிபோச்சி...''
``அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அடுத்த வருஷம் வாங்கிக்கிலாம்... இப்ப கையில காசில்லை!''
``நாலு வருசத்துக்கு ஒரு தடவ எனக்கு ஸ்வெட்டர் வாங்கித்தர காசில்லை... தினமும் உங்களுக்கு குவாட்டர் வாங்கிக்க மட்டும் காசு இருக்குது அப்படித்தானே?''
(கணவர், அருகிலிருக்கும் ஸ்வெட்டர் கடையை நோக்கி டூ வீலரை வேகமாய் நகர்த்துகிறார் )
கிருஷ்ணகிரி, வீ.விஷ்ணு குமார்

நெய்வேலி
மெயின் பஜாரில் இருவர்...
``என்னப்பா! டல்லா இருக்க..?''
``உன் தங்கச்சி இன்னும் என் மேல சந்தேகப்பட்டு சண்டை போடுறா மாப்ள..!''
``அப்டினா சந்தோசப்படு..!''
``சந்தோசப்படவா..?''
``பின்னே! 50 வயசாகப் போகுது! இன்னும் உம் பொண்டாட்டி சந்தேகப்படுற அளவுக்கு உன் மேல லவ்வு இருக்குதே..!''
``அப்படீங்குற..!''
- நெய்வேலி, கி.ரவிக்குமார்

அரூர்
அரசு மருத்துவமனை வெளியே இரு நண்பர்கள்...
``என்னடா, உன்னை நாய் கடிச்சிடுச்சாமே... இப்ப எப்படிடா இருக்கு''?
``நீயாவது என் மேலே அக்கறையா கேட்டியே... பயப்பட ஒண்ணுமில்லைனு டாக்டர் சொல்லிட்டாருடா..”
``உன்னைப் பத்தியா கேட்டேன்? பாவம் உன்னைய கடிச்ச அந்த நாயோட நிலைமையை நினைச்சாதான் பரிதாபமா இருக்கு''!
``அடப்பாவி... என்னை விட உனக்கு அந்த நாய்தான் முக்கியமா''?
``ஆமாடா.. நீயாவது ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்துக்குவ... ஆனா, அந்த நாயி எங்கடா போகும்''!
   - அரூர், வெ.சென்னப்பன்

x