காத்திருப்பு
மகள் விளையாடியபோது சமைத்த
உணவின் சுவை
எங்குமே கிட்டவில்லை இதுவரை.
நிச்சயம் கிட்டுமென காத்திருக்கிறேன்
மகளின் மகள் விளையாட்டுக்கு!
- துரை.நந்தகுமார்
நெடி வாழ்வு
எங்கள் வீடுகளின் நறுமணமாய்
எங்கும் வியாபித்திருக்கிறது
கந்தகத் துகள்கள்.
எங்கள் கைகளெங்கும் மருந்தும்
தடவ கோந்துகளும்.
பல நேரம் உணவுத் துகளோடு உண்கிறோம்.
வாழ்க்கையாகிப்போனது
நெருப்போடு விளையாடும்
எங்கள் குடிசைத் தொழில்!