20-ம் நூற்றாண்டில் வந்த பாடல்களில் இணையத்தில் அதிகம் பேர் ரசித்த பாடல் என்ற பெருமையை ‘போஹிமியன் ராப்சோடி’ பாடல் பெற்றுள்ளது. பிரிட்டிஷைச் சேர்ந்த குயின் என்ற ராக் பேண்ட் சார்பில் 1975-ல் உருவான இந்தப் பாடல், 160 கோடி முறை இணையத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. நவம்பர் மாதத்தில் ‘போஹிமியன் ராப்சோடி’ என்ற பெயரிலேயே குயின் ராக் பேண்டின் வரலாறு படமாக வெளிவந்தது. இந்தப் படம் இதுவரையிலும் உலகம் முழுதும் ரூ. 4,324 கோடி வசூல் செய்திருக்கிறது. இப்படத்தின் முன்னணி கதாபாத்திரமான புகழ்பெற்ற பாப் பாடகர் ஃப்ரெட்டி மெர்குரி தான் ‘போஹிமியன் ராப்சோடி’ பாடலைப் பாடியவர். 40 வருடங்களுக்கு மேலாகியும் இந்தப் பாடல் இன்னமும் உலக இசை ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. நான்கு தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு இருக்கிறார்கள். இரண்டாம் இடத்தில் நிர்வானா பேண்டின் ‘Smells Like Teen Spirit’ என்ற பாடல் உள்ளது. இது 150 கோடி முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
அமரத்துவம் வாய்ந்த சொற்கள்
கணேசகுமாரன்
பத்து, இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் கவிதைகளை மட்டுமே தாங்கி பல சிற்றிதழ்கள் வெளிவந்தன. புதுப்புது கவிஞர்கள் தமிழ்நாட்டில் பல்கிப் பெருகியதற்கு இதுபோன்ற கவிதை இதழ்களைக் காரணமாகச் சொல்லலாம். அறிவுமதியின் 'தை' இதழ், முழுக்க முழுக்க கவிதைகளை மட்டுமே கொண்டு வருடம் ஒருமுறை வெளிவருகிறது. இலக்கியச் சூழலில் கவிதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சிற்றிதழ் வெளிவருவது துணிகர முயற்சி என்றே சொல்லலாம்.