நான் கண்டும் பிரசுரமாகாத முதல் பேட்டி!


ராணிப்பேட்டை ரங்கன்

நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்த நான் இதுவரை யாரையும் பேட்டி (கவனமாகப் படிக்கவும்... புரட்டி அல்ல) எடுத்ததில்லை. இப்போதைய ஆசிரியர் ஏதோ கருணை உள்ளவராக இருப்பதால், “நானும் ஒரு பேட்டி எடுக்கட்டுமா சார்?” என்று கேட்டேன்! “இதுவரை நீங்க பேட்டியே எடுத்ததில்லையா..?” என்று வியப்போடு கேட்டார். “ஆமாம் சார்” என்று பரிதாபமாய் சொன்னேன். ஐயோ பாவம் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது, “சரி எடுங்க. ஆமா... யாரை பேட்டி எடுக்கப் போறீங்க?” என்று கேட்டார்.

“அரக்கோணம் - சென்ட்ரல் லோக்கல் டிரெயின்ல வரும்போது ஒரு பெண் தொழிலதிபரைப் பற்றி அவரிடம் வேலைபார்க்கும் இரு பெண்கள் பேசிக்கிட்டு வந்தாங்க, அந்தம்மாவ பேட்டி எடுக்கலாம் என்று நினைக்கிறேன் சார்” என்றேன். “பெண்கள் பேசுறதையெல்லாம் ஒட்டுக்கேட்குறீங்களா?” என்று ‘மீ டூ’-வை ஞாபகப்படுத்தினார். “இல்லை சார், அவங்க லேடீஸ் பெட்டியில சன்னமா பேசிக்கிட்டது அடுத்த பெட்டியில் இருந்த எனக்குத் தெளிவாக் கேட்டுச்சு” என்றேன்.

அண்ணா சிலையிலிருந்து சென்ட்ரலுக்குப் போக புதிய தலைமைச் செயலகம் (இது செயலகமாகச் செயல்படுவதில்லை – பழையது மட்டும் என்னவாம்?) அருகே சிக்னலில் ‘2ஏ’. வன்முறை ஏதும் செய்யாமல் வழிமறித்து ஏறினேன்!

x