“பெயின்டராக இருந்தவன் ஓவியனாக மாறியிருக்கிறேன்!” - இரா.அன்பழகன்


ஜெ.சரவணன்

ஓவியர் இரா.அன்பழகன்  கொத்தனாரான  தனது தந்தையுடன் பெயின்டர்  வேலைக்குப்  போய்க்கொண்டு இருந்தவர். இப்போது, ஊரறிந்த ஓவியர்களில் ஒருவர். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது பெற்றவர். தொடர்ந்து ஓவியத்துறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவர், சக ஓவியர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர். அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களுடைய ஓவியப் பயணம் பற்றி சொல்லுங்கள்?

நான் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முன்பே வரைய ஆரம்பித்துவிட்டேன். அப்போது, ‘ரயில் மார்க் பெருங்காயம்’ என்ற விளம்பர சுவரொட்டி ஒட்டுவார்கள். அதில் இருக்கும் ரயிலைப் பார்த்து மண்ணிலும் அடுப்புக் கரியிலும் வரைய ஆரம்பித்தேன். அது என்னை இந்த அளவுக்கு ஒரு ஓவியனாக்கும் என்று அப்போது தெரியாது. விளையாட்டாக வரைய ஆரம்பித்த என்னை வித்தைக்காரனாகவே மாற்றியது விதிதான். படிப்பு வரவில்லை; பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு கொத்தனார் தந்தையுடன் பெயின்ட் அடிக்கப் போய்விட்டேன்.

x