பேசிக்கிட்டாங்க...


கிருஷ்ணகிரி

அணைக்கட்டில் இருவர்...

``மாப்ள, தலைவர் படம் ரிலீஸாகி இருக்கும் தியேட்டர் வாசல்ல என் போட்டோ போட்ட டிஜிட்டல் பேனர் இருக்கு பாத்தியா?''
``சார்ட் ஷீட்டுல ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஓட்டுன மாதிரி நாப்பது போட்டோக்களுக்கு நடுவுல இருந்துச்சு... பத்து நிமிசம் நின்னு சர்ச் பண்ணி பாத்தேன்... ஆமா எதுக்கு இந்த அல்ப வேலை?''
``ரசிகன்னு காட்டிக்க வேணாமா?''
``தெரியாமத்தான் கேட்கறேன்... வளைச்சி வளைச்சி கொசகொசன்னு போட்டோக்களைப் போட்டு பேனர் வெச்சிருக்கீங்களே... உங்க தலைவர் வந்து நின்னு ஒவ்வொருத்தரையா பாத்துட்டா போனாரு... ரசிகனா இருங்கடா... கிறுக்கனா இருக்காதீங்க!''
கிருஷ்ணகிரி, வீ.விஷ்ணுகுமார்.

ராயப்பேட்டை

x