‘கோல்டன் ஹார்ஸ்’ விழாவில் ‘தைவான்’ சர்ச்சை!


‘கோல்டன் ஹார்ஸ்’ விழாவில் ‘தைவான்’ சர்ச்சை!

சீனாவில் ஆஸ்கர் விருதுக்கு நிகராக வழங்கப்படும் சினிமா துறை விருதுகள் தான்  ‘கோல்டன் ஹார்ஸ்’ விருதுகள். கடந்த வாரம் பீஜிங்கில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, விருது பெற்றுக்கொண்டு பேசிய ஆவணப்பட இயக்குநர் ஃபூ யூ (Fu Yue), “தைவான் சீனாவைச் சேர்ந்தந்தல்ல, தைவான் சுதந்திரப் பகுதி” என்று பேசினார். இது சீனாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நேரலையில் ஓடிக்கொண்டிருந்த விருது நிகழ்ச்சியில் ஃபூ யூ பேசியது வெட்டப்பட்டது. இந்நிலையில் தைவானைச் சேர்ந்தவர்கள், தைவான் தனி நாடு என்று அங்கீகரிப்பவர்கள் பலரும் இதற்கு ஆதரவாகக் கிளம்பியிருக்கிறார்கள். 1949 முதல் தைவான் தனி சுதந்திர நாடாக இருந்துவந்தது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக, தைவான் சீனாவுடன் சேர்ந்தது என்று சீன அரசு ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதற்கு எதிராகப் பலரும் பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்து வந்தார்கள். தற்போது சீன ஆஸ்கர் விருது விழாவில் இதுகுறித்த பேச்சு எழுந்ததால் அடுத்த ஆண்டு விருது விழாவில் தைவானைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

நூலரங்கம்: 
ஏக்கத்தில் வெளிப்படும் கவிதைகள்
- கணேசகுமாரன்

x